மசாலா வடை

Masala Vadai

குறுந்தகவல்

கடலைப் பருப்பில் புரதம் மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் வளர்ச்சி அடையவும் ,ஊட்டச்சத்து குறைபாடினால் எடை குறைந்தவர்களுக்கு எடை அதிகரிக்க  உதவுகிறது. இது மட்டும் இன்றி வைட்டமின்கள், கனிம சத்து, இரும்பு சத்து மற்றும் பி வைட்டமின் உள்ளது. சிறுவர்களுக்கு கடலைப் பருப்பு வைத்து அடிக்கடி உணவு செய்து தருவதினால் அவர்கள் உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் வளர்ச்சி அடைய உதவும். 

மூலப்பொருள்

கடலை பருப்பு – 250 கிராம் 
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  – 3
வெங்காயம்  – 3 (மிதமான அளவு)
சோம்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்  – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 350 கிராம்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு கைப் பிடி அளவு
கொத்தமல்லி – ஒரு கைப் பிடி அளவு

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. இரண்டு மணி நேரம் கழித்து ஊற வாய்த்த கடலை பருப்பை நன்றாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. மிக்ஸி அல்லது கிரைண்டரில் வடிகட்டி வைத்துள்ள கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள் , உளுந்து மற்றும் உப்பு போட்டு தண்ணீர் விடாமல் கரகர என்று அரைக்கவும்.
  5. கரகர என்று அரைத்தால்தான் வடை சுடும்போது போது நல்ல மொறு மொறு என்று வரும்.
  6. அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போடவும், பிறகு வெங்காயம், கருவேப்பிலை , கொத்தமல்லி போட்டு நன்றாக பிசையவும்.
  7. அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
  8. எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  9. எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு உருண்டையாக உருட்டி இடது உள்ளங்கையில் வைத்து வலது உள்ளங்கையால் லேசாக அமுக்கவும். பிறகு எண்ணெய்யில் போடவும் .
  10. கரண்டியால் வடையை அவ்வப்போது திருப்பி போடவும். அப்பொழுது தான் வடையின் இரு பக்கமும் வேகும்.
  11. நன்றாக சிவந்ததும் எடுத்து பாத்திரத்தில் வைக்கவும். அனைவர்க்கும் சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

To view Recipe in English Click here

One response to “மசாலா வடை”

Easy Recipe: Kadalai Parauppu Vadai at Home | அறிவோம் சுவையான சமையல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி