பகுப்பு: சைவ குழம்பு வகைகள்
-

சங்கரா மீன் குழம்பு
மீன் கண்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. அதுவும் சிறிய வகை மீன்கள் என்றால் இன்னும் சிறப்பு. சிறிய வகை மீன்களில் சங்கரா மீன் அதிக நன்மைகள் உள்ளது. இந்த மீன் சிறந்த கண் பார்வை கிடைக்க, சருமம் பளபளப்பு பெற, ரத்தம் அழுத்தம் குறைய என்று பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் புரத சத்து அதிகம் இருப்பதால் உணவு முறை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். இந்த மீனை…
Written by
·
-

முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை ரசம்
மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது முடக்கற்றான் கீரை. ஒரு காலத்தில் வயோதியர்களுக்கு மட்டுமே மூட்டு தேய்மானத்தின் காரணமாக மூட்டு வலியால் அவதிப்பட்டனர். ஆனால் இப்பொழுது இளைய தலைமுறையினர் கூட மூட்டு வழியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முடக்கற்றான் கீரையை வைத்து ரசம் செய்து குடித்தால் மூட்டு வலியோடு சேர்ந்து சளி மற்றும் இருமலும் சரியாகும்.
Written by
·
-

முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை குழம்பு
மூட்டு வலி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முடக்கற்றான் கீரை என்கின்ற சிறந்த மருந்து. ஒரு காலத்தில் வயோதியர்களுக்கு தான் மூட்டு மற்றும் முழங்கால் வலி இருக்கும் மூட்டின் தேய்மானத்தின் காரணத்தால். ஆனால் இப்பொழுது இளைய தலைமுறையினர்களோ மூட்டு வலி மற்றும் முழ்ங்கால் வலியால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் பெரும்பாலோர் தகவல் தொழிலில்நுட்ப நிறுவனத்தில் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை பளுவின் காரணமாக ஒரே இடத்தில அசையாமல் இருக்கின்றனர். இதன் காரணத்தினால் சிறிய வயதினிலே மூட்டு மற்றும்…
Written by
·
-

பட்டாணி, உருளைக் கிழங்கு குருமா
குருமா என்றாலே அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு குழம்பு. இந்த குருமா சாதத்தில் கலந்து அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் பட்டாணி மற்றும் உருளை கிழங்கு போட்டு குருமா செய்தால் இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குருமாவில் உள்ள மசாலாவே சிறந்த மருத்துவம் உள்ளது. அதோடு பட்டாணி சேர்த்தால் எலும்பை பலமாகவும், புற்று நோய் தவிர்க்க என்று பலவிதத்தில் உடல் ஆரோகியத்துக்கு உதவியாக உள்ளது. உருளை…
Written by
·
-

பயத்தம் பருப்பு சாம்பார்
பயத்தம் பருப்பை பொதுவாக சருமம் மிளிர அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இது உடலுக்கும் நற்பலன்களை கொடுக்கவல்லது. இதில் உள்ள புரத மற்றும் நார் சத்து உடல் எடையும் கொழுப்பையும் குறைக்கவல்லது. நாம் பயத்தம் பருப்பில் சாம்பார் வைப்பதால் இத்துடன் மற்ற பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களும் இணைந்து சிறந்த பலனை தரவல்லது. வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் புளி கிருமி நாசினியாக செயல்படுகிறது.
Written by
·
-

பருப்பு உருண்டை குழம்பு
உருண்டை குழம்பு மூன்று முக்கியமான பொருட்கள் (துவரம் பருப்பு, வெங்காயம் மற்றும் பூண்டு) மூலம் செய்யப்படுகிறது. இந்த மூன்றுமே உடல் ஆரோக்கியம் குடுக்க சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. ஆதலால் அடிக்கடி இந்த குழம்பை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை தரும். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் பூண்டு வாய்வை போக்கும்.…
Written by
·
-

மிளகு ரசம்
மிளகு ரசம் சளி, காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். ரசப்பொடியில் உள்ள மிளகு காரம் சளிக்கு மிக சிறந்தது. இதில் தக்காளி சேர்க்காததால் மிளகு காரம் நல்ல தூக்கலாகவே இருக்கும் அதனால் சளிபிடித்தவர்கள் இந்த ரசத்தை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க தொண்டைக்கு இதமாகவும் சளியும் சட்டென்று சரியாகிவிடும்.
Written by
·
-

வேப்பம் பூ ரசம்
செரிமானம், சளி, காய்ச்சல் என்றாலே நினைவுக்கு வருவது ரசம். இன்னும் சிலர் எந்த வகையான குழம்பாக இருந்தாலும் ரசம் சாப்பிடுவது ஒரு வழக்கமாகவே வைத்து இருப்பர். அதேபோல் விஷத்தன்மையை முறிப்பது, அம்மை, வயிற்றுப் புழு அழிக்க என்றாலே அது வேம்பு. வேப்பிலை அதிக கசப்புத்தன்மை உள்ளதால் அதை யாரும் சாப்பிட தயங்குவர். ஆனால் வேப்பம் பூ அவ்வளவு கசப்பாக இருக்காது. அதனால் ரசத்தில் சிறிது வேப்பம் பூ சேர்த்து செய்தால் யாராக இருந்தாலும் தயக்கமின்றி சாப்பிடுவர். ரசத்துடன்…
Written by
·
-

எலுமிச்சை ரசம்
எலுமிச்சை என்றாலே நமக்கு எலுமிச்சை சாறு குடிப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் எலுமிச்சை வைத்து ரசமும் செய்யலாம். இதில் ரசம் வைப்பதால் அனைத்து பொருள்களின் மருத்துவம் ஒன்று இணைந்து சிறந்த பலனை அளிக்கவல்லது. எலுமிச்சை பழத்தால் ரத்த காயங்கள் உறைய வைக்கவும், உடல் எடை குறைய என்று பல வகையில் உதவியாக உள்ளது.
Written by
·
-

தக்காளி ரசம்
நமது அன்றாட சமையலில் முக்கியமான பொருளாக இருப்பது தக்காளி. தக்காளி சுவைக்காகவும் உடல் ஆரோகியத்துக்கும் பயன்படுத்துகின்றனர். தக்காளி ரசத்தில் புளிக்கு பதிலாக கூடுதலாக தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளி கடுமையான வலி நீக்க, கண் பார்வைக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாகுவதை தடுக்க என்று பல வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரவல்லது.
Written by
·