குறுந்தகவல்
தேங்காய் உண்பதால் முடி உதிர்வை தடுக்க மற்றும் சருமம் சுருக்கம் போக என்று சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. சிறார்கள் பசி என்றால் சட்டென்று தேங்காய் துருவி அதில் சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொடுப்பர். மிக சுவையாக இருக்கும். அது போல் தோசை அல்லது இட்லிக்கு சட்னி செய்து தொட்டு சாப்பிடுவர்.
மூலப்பொருள்
தேங்காய் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 2
உடைச்ச கடலை – கைப்பிடியளவு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
தேங்காய்யை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், மிளகாய், உப்பு மற்றும் உடைச்ச கடலை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை அரைத்து வைத்துள்ள பாத்திரத்தில் போடவும். பிறகு பெருங்காயத்தூள் போட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும். இந்த தேங்காய் சட்னியை இட்லி, தோசை, பொங்கல் மற்றும் பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு : இந்த சட்னி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் விரும்பி தோசை அல்லது இட்லிக்கு தொட்டு சாப்பிடுவர். தேங்காய் குறைவாக இருந்தால் உடைச்ச கடலையை இன்னும் ஒரு பங்கு போட்டு அரைத்தால் நல்ல அடர்த்தியாக வரும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கலக்கினால் அதிகமாகவும் சுவை குறையாமலும் இருக்கும்.


பின்னூட்டமொன்றை இடுக