துவரம் பருப்பு கடைதல் – ||

துவரம் பருப்பு கடைதல் - II

குறுந்தகவல்

ஒரு மாறுதலுக்காக சாம்பாருக்கு பதிலாக துவரம் பருப்பு கடைதல் செய்யலாம். ஏனெனில் இந்த கடைதலில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி என்று பல பொருட்களை வைத்து தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

மூலப்பொருள்

துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 2 பல்
கடுகு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

துவரம் பருப்பை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை அரிந்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் கழுவிய துவரம் பருப்பு, அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும். பருப்பு வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

கடுகு, பெருங்காயத்தை எண்ணையில் தாளித்து பருப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் போடவும். இறுதியாக உப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

சுட சுட சாதத்தில் இந்த பருப்பு கடைதல் போட்டு, நெய் ஊற்றி நன்றாக பிசைந்து, அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவலோடு சேர்த்து சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக