குறுந்தகவல்
துவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஆதலால் சாம்பார் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமானால் சட்டென்று சாம்பார் வைத்துவிடலாம்.
மூலப்பொருள்
துவரம் பருப்பு – 100 கிராம்
தனியா \ கொத்தமல்லி விதை – 200 கிராம்
மிளகு – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்
பச்சை அரிசி – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
செய்முறை
மேல குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு மிதமான காற்றில் நன்றாக ஆறவைத்து பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் நன்றாக கொதித்து இறக்கும் சமயத்தில் அரைத்து வைத்திருக்கும் சாம்பார் பொடியை 2 தேக்கரண்டி அளவு போடவும். பிறகு நன்றாக கலந்து பின் இறக்கவும். இப்பொழுது கம கம மற்றும் சுவையான சாம்பார் தயார்.


பின்னூட்டமொன்றை இடுக