-

வாழைக்காய் வறுவல்
View recipe: வாழைக்காய் வறுவல்வாழைக்காய் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அமாவாசை அன்று பித்துருக்களுக்கு படைப்பதுதான். வாழைக்காயை வறுத்து படைப்பது வழக்கம். வாழை என்றாலே அதில் உள்ள தண்டு, பூ, காய் மற்றும் பழம் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. வாழைக்காயில் இரும்பு மற்றும் நார் சத்து இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. வாழைக்காயில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
-

பிரண்டைத் துவையல்
View recipe: பிரண்டைத் துவையல்பிரண்டை கொடி வகையை சார்ந்தது. இதை வீட்லயும் வளர்க்க கூடிய செடியாகும். இந்த பிரண்டை செரிமான கோளாறு, வாய் புண், வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது. இந்த துவையலில் வெல்லம் மற்றும் உளுந்து சேர்ப்பதால் சாப்பிடும் போது அரிப்பு இல்லாமலும் சுவையாக இருக்கும்.
-

தேங்காய் சட்னி
View recipe: தேங்காய் சட்னிதேங்காய் உண்பதால் முடி உதிர்வை தடுக்க மற்றும் சருமம் சுருக்கம் போக என்று சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. சிறார்கள் பசி என்றால் சட்டென்று தேங்காய் துருவி அதில் சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொடுப்பர். மிக சுவையாக இருக்கும். அது போல் தோசை அல்லது இட்லிக்கு சட்னி செய்து தொட்டு சாப்பிடுவர்.
-

வெண்பொங்கல் (பச்சரிசி)
View recipe: வெண்பொங்கல் (பச்சரிசி)பச்சரிசி உடல் மெலிதாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருக்கிறவர்களுக்கு மிக சிறந்த உணவாகும். சிறியவர்களுக்கு அல்லது முதியவர்களுக்கு பச்சரிசி நல்ல வெந்து குழைந்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கும். இந்த அரிசியில் பொங்கல் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இத்துடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றும்.
-

வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)
View recipe: வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)புழுங்கல் அரிசி விரைவாக ஜீரணமாக கூடிய உணவாகும். ஏனென்றால் ஏற்கனவே நெல்லை வேகவைத்து உமி தனியாக அரிசி தனியாக பிரித்து வைப்பர். அதனால் சீக்கிரமாகவே அரிசி வெந்துவிடும். இது உடம்புக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த அரிசியுடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த மருந்தாகும்.
-

வாழைக்காய் பொரியல்
View recipe: வாழைக்காய் பொரியல்வாழைக்காய் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் இது முக்கிய பங்கைவகிக்கிறது. இந்த வாழைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் உள்ள நார் சத்து இருப்பதால் குடலில் உள்ள நச்சு தன்மைகளை வெளியேற்ற உதவுகிறது. இதை பொரியலாக செய்து சாப்பிட்டால் சுவையாகவும் அத்துடன் உடல் ஆரோகியத்துக்கும் நல்லது.
-

முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை ரசம்
View recipe: முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை ரசம்மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது முடக்கற்றான் கீரை. ஒரு காலத்தில் வயோதியர்களுக்கு மட்டுமே மூட்டு தேய்மானத்தின் காரணமாக மூட்டு வலியால் அவதிப்பட்டனர். ஆனால் இப்பொழுது இளைய தலைமுறையினர் கூட மூட்டு வழியால் அவதிப்படுகின்றனர். இதற்கு முடக்கற்றான் கீரையை வைத்து ரசம் செய்து குடித்தால் மூட்டு வலியோடு சேர்ந்து சளி மற்றும் இருமலும் சரியாகும்.
-

முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை துவையல்
View recipe: முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை துவையல்முடக்கற்றான் கீரை என்றாலே மூட்டு வழியை போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் தகவல் தொழிலில்நுட்ப நிறுவனத்தில் வேளை பார்ப்பதால் உட்கர்ந்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர் ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை. இந்த முடக்கற்றான் கீரையை துவையலாக செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும்.
-

முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை குழம்பு
View recipe: முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை குழம்புமூட்டு வலி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முடக்கற்றான் கீரை என்கின்ற சிறந்த மருந்து. ஒரு காலத்தில் வயோதியர்களுக்கு தான் மூட்டு மற்றும் முழங்கால் வலி இருக்கும் மூட்டின் தேய்மானத்தின் காரணத்தால். ஆனால் இப்பொழுது இளைய தலைமுறையினர்களோ மூட்டு வலி மற்றும் முழ்ங்கால் வலியால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் பெரும்பாலோர் தகவல் தொழிலில்நுட்ப நிறுவனத்தில் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை பளுவின் காரணமாக ஒரே இடத்தில அசையாமல் இருக்கின்றனர். இதன் காரணத்தினால் சிறிய வயதினிலே மூட்டு மற்றும்…
-

முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை தோசை
View recipe: முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை தோசைமுடக்கற்றான் கீரை என்றாலே மூட்டு வழியை போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் ஐ.டி நிறுவனத்தில் வேளை பார்ப்பதால் உட்கர்ந்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர் ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை அதனால் உடல் எடையும் கூடுகிறது அத்துடன் துணை இணைப்பாக மூட்டு வலியும் வருகிறது. இந்த முடக்கற்றான் கீரையை தோசையாக செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும் அத்துடன் மிளகு சேர்த்திருப்பதால்…





