குறுந்தகவல்
பூண்டு இட்லி பொடி, நம்ம வீட்டில் இருக்கூடிய பொருளை வைத்து மிக எளிமையாக செய்யலாம். பூண்டு சாப்பிடுவதால் செரிமானம் சரி செய்ய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, மாதவிடாய் குறைகளை போக்க என்று பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை பச்சையாக சாப்பிட பெரும்பாலும் விரும்பமாட்டார்கள், அவர்களுக்கு இந்த பொடியை செய்து இட்லி அல்லது தோசைக்கு வைத்துக் கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
மூலப்பொருள்
பூண்டு – 8
காய்ந்த மிளகாய் – 15
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாயின் காம்பை பித்துவிடவும். காய்ந்த மிளகாய் மற்றும் உப்பைப்போட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்பு அத்துடன் பூண்டு(தோல் உரிக்காமல்) அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும். பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் போட்டு வைக்கவும். இதை பல நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
குறிப்பு : சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இட்லி அல்லது தோசைக்கு இந்த பொடி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தொட்டு சாப்பிடலாம்.


பின்னூட்டமொன்றை இடுக