குறுந்தகவல்
தமிழ் பண்டிகையில் விழாவின் உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டக்கடலை சுண்டல். கருப்பு கொண்டக்கடலையில் ப்ரோடீன் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையவும், இரத்த சக்கரை அளவை குறைகிறது, அடர்த்தியான கூந்தல் என்று பல வகையில் உதவுகிறது .
மூலப்பொருள்
கருப்பு கொண்டக்கடலை – 1/4 கிலோ
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
கருப்பு கொண்டக்கலையை நன்றாக கழுவி பின்பு தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைக்கவும். இப்படி ஊறவைப்பதனால் சாப்பிடும் போது மிகவும் மென்மையாக இருக்கும். அரைமணி நேரம் கழித்து குக்கரில் கருப்பு கொண்டக்கடலை போட்டு பின்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, குக்கர் மூடி விசில் போட்டு, மிதமான சூட்டில் வேகவைக்கவும். 5 முதல் 6 விசில் வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும்.
சிறுது நேரம் கழித்து குக்கரை திறந்து, தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் கொட்டவும். தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்ததும் பாத்திரத்தில் உள்ள கருப்பு கொண்டைக்கடலையில் கொட்டவும். பின்பு அனைவருக்கும் இதை சின்ன கிண்ணத்தில் போட்டு தரவும்.
குறிப்பு : இந்த சுண்டலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சிறுவர்கள் சாப்பிட மறுத்தால் தேங்காய் துருவி போட்டு குடுக்கலாம். இந்த சுண்டலை அனைவருக்கும் குடுக்கலாம் .


பின்னூட்டமொன்றை இடுக