கருவேப்பிலை துவையல்

குறுந்தகவல்

மூதாதையர் கூந்தல் அடர்த்தியாக கருமையாக வளர வேண்டும் என்றால் கருவேப்பில்லையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தேய்க்க சொல்வர். கருவேப்பிலை சமையலில் வாசனைக்காக சேர்த்தால் பெரும்பாலனோர் அதை ஒதுக்கி வைத்துதான் சாப்பிடுவர். இதனால் அதில் சத்துக்கள் உடம்பில் சேராமல் போய்விடுகிறது.  இதை தவிர்க்க  துவையலாக செய்தால் அனைத்து வயதினரும் சாப்பிடுவர்.  இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவும், அஜீரண கோளாறு சரி செய்யவும்  என்று பல நண்மைகளை கொண்டது.

மூலப்பொருள்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி  அளவு
புளி – நெல்லிக்காய் அளவு 
காய்ந்த மிளகாய்  – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கருவேப்பிலையை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் கருவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு நல்ல மையாக அரைக்கவும். இந்த துவையலை தாளிக்காமல் சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலில் முழுமையாக சேரும் .

குறிப்பு : இந்த துவையலை சாதத்துக்கு, இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். கூடுதலாக இட்லி அல்லது தோசை சாப்பிடுவர்.

பின்னூட்டமொன்றை இடுக