பீன்ஸ் பொரியல் – I

பீன்ஸ், BeanPoriyal s, பொரியல்,

குறுந்தகவல்

பீன்ஸ் காய்களிலே மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த காய்யாகும். பீன்ஸ் சாப்பிடுவதால் உடலில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் ,  கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. பீன்ஸ், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும் இருக்கும். 

மூலப்பொருள்

பீன்ஸ் – 1/2 கிலோ 
தேங்காய் – 1/4 மூடி
வெங்காயம்  – 2 (மிதமான அளவு)
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்   – 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கல்  உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

பீன்ஸ் நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய்யை துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு எண்ணெய்யை ஊற்றி கடுகு மற்றும் உளுந்தை போட்டுத் தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். நல்ல பொன்னிறமாக வதங்கியதும் பீன்ஸ், மிளகாய்த்தூள் மற்றும் உப்பை போட்டு வதக்கவும்.

சிறிது வதக்கியதும் பீன்ஸ் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி தட்டை வைத்து மூடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து தட்டை எடுத்து தண்ணீர் வற்றியதா அல்லது பீன்ஸ் வெந்ததா என்று பார்க்கவும். பீன்ஸ் வேகவில்லை என்றால் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை வைத்து மூடவும். அவ்வப்போது தட்டை எடுத்து கிளறிவிடவும் அப்பொழுதுதான் கரி புடிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

பீன்ஸ் வெந்ததும் தேங்காய் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்கி பிறகு அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும். இந்த பொரியலை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் ரசத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு : இந்த பொரியலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சாம்பார் சாதத்துக்கு பீன்ஸ் பொரியலை தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும் அது மட்டும் இன்றி கூடவும் சாப்பிடுவர். உடல் எடை குறைக்க எண்ணுவோர் சப்பாத்தியுடன் இதை சாப்பிட நல்ல பலனைக் கொடுக்கும் .

பின்னூட்டமொன்றை இடுக