குறுந்தகவல்
மீன் கண்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதுவும் மத்தி மீன் போன்ற சிறிய மீன்கள் கண்களுக்கு மிகவும் சிறந்தது மற்றும் கொழுப்புத் தன்மை அற்றது. அதனால் எந்த வயதினரும் இதை சாப்பிடலாம். பெரும்பாலோர் குழம்பு மீன்களை சாப்பிடுவதை தவிர்ப்பர். அதனால் அவர்களுக்கு மத்திமீனை வறுத்து தரலாம். இதில் புளியையும் சேர்த்து ஊறவைத்து வறுப்பதால் உடம்புக்கு இன்னும் சிறந்தது.
மூலப்பொருள்
மத்தி மீன் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை
மத்தி மீன் குளிர்ச்சியாக இருந்தால் சிறிது நேரம் தண்ணீர் விட்டு வைக்கவும். சிறிது நேரம் கழித்து மீனை லேசாக கழுவி தண்ணீரை கீழே ஊற்றி விடவும். பிறகு மத்தி மீனை வெட்டி மீனின் உள்ளே தேவையற்றதை எடுத்துவிட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். மீனை அரிய தெரியாதவர்கள் மீன் கடையிலே வெட்டி வாங்கிக் கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனை கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிரட்டிய பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி பின்பு தண்ணீரை கீழே ஊற்றி விடவும். இவ்வாறாக தண்ணீரை ஊற்றி இரண்டு அல்லது மூன்று கழுவி விடவும். அப்பொழுது தான் அதில் எதாவது கிருமிகள் இருந்தால் அறவே அழிந்துவிடும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு புளியை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு பின்பு உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து கலக்கவும். ஒரு 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து தோசை கல்லில் எண்ணெய்யை ஊற்றி அதில் மீனை போட்டு வறுக்கவும்.
குறிப்பு : மத்தி மீன் வறுவல் அணைத்து வயதினரும் சாப்பிடுவர் . இந்த மீனில் அதிக முள் இருப்பதால் பெரியவர்கள் சிறியவர்களுக்கு தகுந்தவாறு முள் இல்லாமல் சதை எடுத்துக் கொடுக்கவும்.


பின்னூட்டமொன்றை இடுக