குறுந்தகவல்

துவரம் பருப்பு துவையல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய துவையல் ஆகும். துவரம் பருப்பு உணவில் அதிகம் சேர்ப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் எடை குறைப்பதற்கும் சிறந்து விளங்குகிறது. துவரம் பருப்புடன் தேங்காய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் உடல் நலத்திற்கு இன்னும் சிறப்பை சேர்க்கிறது.  

மூலப்பொருள்

துவரம் பருப்பு – 100 கிராம் 
தேங்காய் – 1/4 மூடி
காய்ந்த மிளகாய் – 1 
பூண்டு பல் உரித்தது – 5
உப்பு – தேவையான அளவு

செய்முறை

எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சட்டி நன்றாக சூடானதும் துவரம் பருப்பை போட்டு நல்ல பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வறுத்த துவரம் பருப்பு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு பல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைக்கவும். நன்றாக அரைத்தவுடன் மிக்ஸியில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

குறிப்பு : இந்த துவையலை வெறுமனே சாப்பிட சுவையாக இருக்கும். துவரம் பருப்பு துவையலை சாதத்தில் போட்டு பிசைந்து அத்துடன் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையலை ரசம் அல்லது தயிர் சாதத்துக்கோ தொட்டு சாப்பிடலாம்.

பின்னூட்டமொன்றை இடுக