சேனைக்கிழங்கு வறுவல்

குறுந்தகவல்

சேனைக்கிழங்கு என்றாலே ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படுதல் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கிழங்கு உடல் ஆரோகியதுக்கு மிகவும் சிறந்தது மற்றும் பல நாட்கள் வைத்து சமைத்து சாப்பிடலாம். இந்த கிழங்கை நன்றாக தண்ணீரில் வேகவைத்து சமைத்து சாப்பிட்டால் அரிப்பு ஏற்படாது. இதில் உடல் பலவீனம், ஆஸ்துமா போன்ற நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளகூடிய சிறந்த உணவாகும்.

மூலப்பொருள்

சேனைக்கிழங்கு – 1/4 கிலோ
குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சேனைக்கிழங்கை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். குக்கரில் வேகவைத்தால் குழைந்து விடும் அது மட்டும் இன்றி சுவையாகவும் இருக்காது. வேகவைத்த கிழங்கு ஆறியவுடன் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு கிழங்கை சிறிய மற்றும் வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

பின்பு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அரிந்து வைத்துள்ள கிழங்கை போடவும். பின்பு இரண்டு அல்லது மூன்று முறை பிரட்டவும். உப்பு மற்றும் குழம்பு மிளகாய்த் தூள் போட்டு நன்றாக கிளறி விடவும்.

பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக கிளறிவிடவும். இவ்வாறு நல்ல மொறு மொறுவென்று வரும் வரை மெதுவாக கிளறிவிடவும். நல்ல வறுபட்டவுடன் அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும்.

இந்த வறுவல் அனைவராலும் விரும்பி சாப்பிடுவர். இதை சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம் இல்லை வெறுமனே கூட சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு : இந்த கிழங்கு வறுவல் மொறு மொறுவென்று இருப்பதால் சிறியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவர். இதை சூடான சத்தத்துடன் தொட்டு சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக