முட்டை பொரியல்

முட்டை பொரியல்

குறுந்தகவல்

முட்டை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய உணவாகும். உடல் வலிமை பெற, முகம் பள பளப்பு பெற, தலை முடி நன்றாக வளர என்று பல வகையில் பலன் அளிக்கிறது. முட்டையில் மஞ்சள் தூள் சேர்த்து சமைப்பதால் அதில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும்.

மூலப்பொருள்

முட்டை – 4
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். பிறகு மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பை போட்டு நன்றாக கலக்கவும். பிறகு பொல பொல என்று வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும்.

குறிப்பு : இந்த முட்டை பொரியல் நான்கு பேர் சாப்பிடலாம். இந்த பொரியலை பூரி, சப்பாத்தி, சாம்பார் சாதம், ரச சாதம் என்று அனைத்து சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

பின்னூட்டமொன்றை இடுக