குறுந்தகவல்
கடலை மாவு அடை மிக சுலபமாக செய்யக்கூடிய துணை உணவு என்று கூறலாம். வெறும் ரசம் வைத்து கூட இதை சேர்த்து சாப்பிடலாம். இது அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய துணை உணவாகும்.
மூலப்பொருள்
கடலை மாவு – 1 கோப்பை
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 பெரியது
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், சோம்பு தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு பதத்துக்கு கலந்துக் கொள்ளவும்.
தோசை கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். தோசை கல் காய்ந்ததும் ஊத்தப்பம் தோசை அளவு சிறிய வட்டமாக ஊற்றி பிறகு எண்ணையை அந்த மாவை சுற்றி ஊற்றவும். கொஞ்சம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபடியும் எண்ணையை அடையை சுற்றி ஊற்றவும். நன்றாக வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். இப்படியாக எல்லா மாவையும் அடையாக சுட்டு வைத்துக் கொள்ளவும்.
சாப்பாட்டை பறிமாறும்போது இந்த அடையை வைத்து பறிமாறவும் அனைவரும் விரும்பி கூடவே சாப்பிடுவர்.


பின்னூட்டமொன்றை இடுக