குறுந்தகவல்
பருப்பு துவையல் ஏழைக்கு கிடைத்த எளிய உணவு. இந்த துவையல் பயத்தம் பருப்பில் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பயத்தம் பருப்பு சருமம் பளபளப்பாக இருப்பதற்கும், செரிமான சக்தியை அதிகரிக்க என்று பல நன்மைகள் உள்ளது. இந்த துவையல் எளிதில் செரிக்க கூடியதாக இருப்பதால் வயோதியர்களும் சாப்பிடலாம். இதை வெறுமனவும் சாப்பிடலாம்.
மூலப்பொருள்
பயத்தம் பருப்பு – 1 ஆழாக்கு
தேங்காய் – 1/4 மூடி
காய்ந்த மிளகாய் – 1
பூண்டு பல் – 4
உப்பு – தேவையான அளவு
செய்முறை
எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். பிறகு பயத்தம் பருப்பை போட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு காற்றாட ஆறவிடவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில், வறுத்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பு, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நல்ல கரகர என்று அரைக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்கவும். இதை சாதத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இதற்கு துணை உணவாக வற்றல், பொரியல் அல்லது ஊறுகாய் என்று எதாவது தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு : இந்த துவையல் குறுகிய நேரத்தில் சட்டென்று செய்து தரலாம். துவையலை அணைத்து வயதினரும் சாப்பிட விரும்புவர்.


பின்னூட்டமொன்றை இடுக