குறுந்தகவல்
பிரியாணி என்றாலே அணைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்த உணவாகும். இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போடுவதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பச்சை காய்கறியாகும். இதில் தித்திப்பு இருப்பதால் வெறுமனே சாப்டிடலாம். இதில் உடல் இடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது.
மூலப்பொருள்
பிரியாணி அரிசி – 1/2 கிலோ
நெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 4 (மிதமான அளவு)
தக்காளி – 3 (மிதமான அளவு)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
பட்டை – 4
கிராம்பு – 4
சோம்பு – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் – 2
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பட்டாணி – 50 கிராம்
மிளகாய்த் தூள் – 1/2 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
எலுமிச்சை – 1
செய்முறை
பிரியாணி அரிசியை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வைக்கவும். வெங்காயத்தை நீட்டுவாக மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டாணி, கருவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்றாக கழுவி பொடி பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டின் தோலை உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில், இஞ்சி, சோம்பு, ஏலக்காய் மற்றும் பூண்டை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைக்கவும் (உரல் இருந்தால் அதில் போட்டு நன்றாக நசுக்கவும். உரலில் நசுக்குவது இஞ்சி, பூண்டின் சிறந்த மணத்தையும் சுவையையும் கூட்டும்).
அரிசி குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். 2 தேக்கரண்டி நெய் மாற்றும் எண்ணையை ஊற்றவும். சிறிது காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பு போட்டு வதக்கவும். மிளகாயை போட்டு நல்லா வதக்கிய பிறகு வெங்காயம் போட்டு நல்ல பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும். தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும். நல்ல தொக்கு போல வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை போட்டு வதக்கவும். இத்துடன் மிளகாய்த் தூளைப் போட்டு வதக்கவும். (பச்சை மிளகாய் போட்டிருப்பதால் மிளகாய்த் தூள் அவசியம் இல்லை இருப்பினும் காரம் அதிகம் சாப்பிடுபவர்கள் மிளகாய்த் தூள் தேவையான அளவு போட்டுக்கலாம்.)
வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள கருவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா, கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணியை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு 2 அல்லது 3 நிமிடம் வேகவைக்கவும். அரிசியை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிக்கட்டி குக்கரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மெதுவாக கிளறவும். பிறகு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். பாதி எலுமிச்சை பழத்தை நன்றாக பிழிந்துவிடவும் (அரிசி குழையாமல் அல்லது ஒட்டாமல் இருப்பதற்கு எலுமிச்சை சாறு சிறந்தது). குக்கரை நல்ல இறுக்கமாக மூடிவிட்டு விசில் வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் திறந்து மெதுவாக கிளறவும். இத்துடன் வெங்காய பச்சடியை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு : காய்களை சாப்பிட தவிர்க்கும் குழந்தைகள் கூட இந்த பிரியாணியில் உள்ள காய்களை ருசித்து சாப்பிடுவர். இத்துடன் பிரட் மற்றும் மீல் மேக்கர் சேர்த்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்..


பின்னூட்டமொன்றை இடுக