மீல் மேக்கர் வறுவல்

குறுந்தகவல்

மீல் மேக்கர் என்பது சோளம் துண்டுகளிருந்து செய்யப்பட்டவையாகும். சைவம் சாப்பிடுவர்கள் கோழி அல்லது ஆட்டு கறி வறுவல் போன்று சுவை மற்றும் மனம் பெறுவதற்கு இதை சாப்பிடலாம். மீல் மேக்கரின் சுவை கிட்டத்தட்ட அசைவ சுவை போல் இருக்கும். அதனால் அசைவ பிரியர்வர்கள் கூட இதை சாப்பிடுவர். இது மிகவும் எளிதாக செய்ய கூடிய துணை உணவாகும்.

மூலப்பொருள்

மீல் மேக்கர் – 20 துண்டு 
வெங்காயம்  – 2 (மிதமான அளவு)
தக்காளி – 2 (மிதமான அளவு)
சோம்பு – 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பட்டை – 4
கிராம்பு – 4
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நன்றாக கொதிவந்தவுடன் மீல் மேகரை போடவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு ஓரமாக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 15 அல்லது 20 நிமிடம் கழித்து வேக வைத்துள்ள மீல் மேகரை நன்றாக பிழிந்து ஒரு தட்டில் வைக்கவும். பிறகு சிறு சிறு துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.

எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். சிறிது சூடானதும் சோம்பு, பட்ட, கிராம்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு நல்ல பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி மற்றும் உப்பை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும். நன்றாக தொக்கு போல வதக்கியதும் வேக வைத்துள்ள மீல் மேகரை போட்டு வதக்கவும்.

வதக்கும் பொழுது மீல் மேகரில் இருந்து தண்ணீர் வெளிய வரும். அதனால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக வதக்கவும். தண்ணீர் வற்றியதும் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். நல்ல மொறு மொறு என்று வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு இறக்கி வைக்கவும்.

குறிப்பு : இந்த வறுவலை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சாம்பார் அல்லது ரசம் சாதத்துக்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும் அது மட்டும் இன்றி கூடவும் சாப்பிடுவர்.

பின்னூட்டமொன்றை இடுக