குறுந்தகவல்
பூரிக்கிழங்கு அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய இணை உணவாகும். இது பூரி அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
மூலப்பொருள்
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
உருளைக் கிழங்கு நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடிப் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் குக்கரின் விசிலை மெதுவாக எடுத்து தனியே வைத்து விட்டு பிறகு மெதுவாக குக்கரின் மூடியை திறக்கவும்.
உருளைக்கிழங்கு மிகவும் சூடாக இருக்கும் அதனால் குக்கரில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விடவும் (மறுபடியும் தண்ணீர் ஊற்றினால் உருளைக்ககிழங்கு இறுகிவிடும் மற்றும் சுவையாக இருக்காது). பிறகு அந்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து கையால் நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். நன்றாக தாளித்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.
அனைத்து பொருளையும் நன்றாக வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி விடவும். பிறகு மஞ்சள் தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கை அதில் போடவும். பிறகு நன்றாக கிண்டி கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தப்பின் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.
குறிப்பு : இந்த பூரிக்கிழங்கு சிறிது தண்ணியாக இருப்பதால் சப்பாத்தியில் ஊற்றினால் சாப்பிடமுடியாத வயோதியர்கள் எந்த சிரமமும் இன்றி சாப்பிடுவர். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடுவர்.


பின்னூட்டமொன்றை இடுக