குறுந்தகவல்
பிரண்டை கொடி வகையை சார்ந்தது. இதை வீட்லயும் வளர்க்க கூடிய செடியாகும். இந்த பிரண்டை செரிமான கோளாறு, வாய் புண், வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது. இந்த துவையலில் வெல்லம் மற்றும் உளுந்து சேர்ப்பதால் சாப்பிடும் போது அரிப்பு இல்லாமலும் சுவையாக இருக்கும்.
மூலப்பொருள்
பிரண்டை – ஒரு கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
இஞ்சி – சிறிய தூண்டு
வெல்லம் – ஒரு எலுமிச்சை அளவு
மிளகு – 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் கட்டி – 1 துண்டு
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவில் பாதி
வெள்ளை எள்ளு – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
- பிரண்டையை நன்றாக கழுவி தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் (பிஞ்சு பிரண்டையாக இருந்தால் தோல் சீவ தேவையில்லை).
- இஞ்சியை தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கவும். அதில் வெள்ளை எள்ளு போட்டு நல்ல படபடவென்று பொரித்தவுடன் ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் உள்ள எண்ணெய் சட்டியில் 1 தேக்கரண்டி எண்ணெய்யை விட்டு மிளகு மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கி வறுத்த எள்ளு பாத்திரத்தில் கொட்டவும்.
- அதே எண்ணெய் சட்டியில் மறுபடியும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை தாளித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- எண்ணெய் சட்டியில் மீண்டும் எண்ணெய்யை விட்டு பிறகு பிரண்டையை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நிதானமாக வதக்கவும். நல்ல பச்சை நிறமாக மாறும் வரை வதக்கவும்.
- வதக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பிரண்டை, எள்ளு, மிளகு, பெருங்காயம், மற்றும் வெல்லம், உப்பு, புளி ஆகிய அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைக்கவும்.
- பிறகு அந்த ஜாரில் தாளித்து வைத்துள்ள கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுற்று சுற்றிவிடவும் அல்லது கரகரவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
குறிப்பு : பிரண்டை துவையல் சற்று நர நர இருப்பதால் தோசை மற்றும் இட்லிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் அது மட்டுமல்லாது கூடுதலாகவும் சாப்பிடுவர்.


பின்னூட்டமொன்றை இடுக