வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் பெரியது – 2
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காய் தோல் சீவிக் கொள்ளவேண்டும். பின்பு வாழைக்காயை நான்கு பாகங்களாக அரிந்து பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரிந்த வாழைக்காயை நன்றாக கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தில் வாழைக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பிறகு உப்பு மட்டும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து வேகவைக்கவும்.
பாதி வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு ஒரு எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி பிறகு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் மட்டும் பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெய் சட்டியில் போட்டு வதக்கவும்.
பிறகு வேகவைத்த வாழைக்காயை அந்த சட்டியில் போட்டு கிளறவும். நன்கு கிளறிய பிறகு தேங்காய் துருவல், கருவேப்பிலை மட்டும் கொத்தமல்லியை போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.
குறிப்பு : இந்த பொரியலை சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


பின்னூட்டமொன்றை இடுக