முடக்கறுத்தான் கீரை – 1 கட்டு (200 கிராம்)
பூண்டு பல் – 12 அல்லது 1 முழுப்பூண்டு
காய்ந்த குண்டு மிளகாய் – 5
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
நல்லெண்ணை- 2 தேக்கரண்டி
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு எண்ணெய் சட்டியில் நல்லெண்ணையை ஊற்றி பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த குண்டு மிளகாய் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கியப்பின் புளி, முடக்கத்தான் கீரை, பூண்டு போட்டு வதக்கவும். வதக்கிய பிறகு மிதமான காற்றில் உளரவிடவும்.
பிறகு வதக்கி வைத்துள்ளதை மிக்சியில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு நல்ல மையாக அரைக்கவும். அரைத்ததை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். தாளிக்க வேண்டிய அவசியமில்லை ஏன்னெனில் தாளித்தால் அதில் உள்ள மருத்துவ குணம் போய் விடும். இதை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு
இந்த துவையலை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போகும். மருத்துவ குணம் கொண்ட கீரைக்கு நல்லெண்ணெய் சேர்ப்பதால் மருத்துவ குணம் கெடாமல் இருக்கும்.


பின்னூட்டமொன்றை இடுக