முடக்கறுத்தான் கீரை – 100 கிராம்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த குண்டு மிளகாய் – 2
பூண்டு பல் – 5
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 1
கடுகு – 1 தேக்கரண்டி
நெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு எண்ணெய் சட்டியில் 1 தேக்கரண்டி நெய்யை விட்டு முடக்கற்றான் கீரை மற்றும் பூண்டைப் போட்டு லேசாக வதக்கவும். வதக்கிய பின் மிதமான காற்றில் உளரவிடவும். பிறகு மிக்சியில் போட்டு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவை மிக்சியில் போட்டு ரசத்திற்கு உடைத்து வைப்பது போல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அந்த பாத்திரத்தில் உப்பு மற்றும் தக்காளி போட்டு நன்றாக கலக்கவும் அல்லது கையால் நன்றாக பிசைந்துவிடவும். ரசக் கலவைப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் முடக்கற்றான் கீரை மற்றும் பூண்டைப் போட்டு நன்றாக கலக்கிவிடவும். பிறகு தாளிக்கும் கரண்டியில் நெய்யை ஊற்றி கடுகு போட்டு தாளித்து ரசம் நல்ல கொதி வந்தவுடன் போட்டு அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும். இந்த ரசத்தை சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாகவும் இருக்கும் மற்றும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
குறிப்பு : வாரத்திற்கு ஒரு முறை இதை குடிப்பதால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டு வலியும் சரியாகி மற்றும் வலிமையையும் கொடுக்கும். இந்த ரசம் 4 நபர்கள் தாராளமாக சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் இல்லை டம்ளரில் ஊற்றியும் குடிக்கலாம்.


பின்னூட்டமொன்றை இடுக