முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை தோசை

விரைவில் காட்சி வரும்

குறுந்தகவல்

முடக்கற்றான் கீரை என்றாலே மூட்டு வழியை போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் ஐ.டி நிறுவனத்தில் வேளை பார்ப்பதால் உட்கர்ந்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர் ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை அதனால் உடல் எடையும் கூடுகிறது அத்துடன் துணை இணைப்பாக மூட்டு வலியும் வருகிறது. இந்த முடக்கற்றான் கீரையை தோசையாக செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும் அத்துடன் மிளகு சேர்த்திருப்பதால் சளிக்கும் மிக சிறந்தது.

மூலப்பொருள்

இட்லி அரிசி – 1/2 கிலோ
முடக்கறுத்தான் கீரை – 1 கட்டு (200 கிராம்)
மிளகு – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணை – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டு மற்றும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். குறைந்த பட்ச்சம் 5 மணி நேரம் ஊறவேண்டும். முடக்கற்றான் கீரையை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்துள்ள அரிசியை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

அரிசியை நன்றாக வடிகட்டி கிரைண்டரில் போட்டு அத்துடன் அரிந்து வைத்துள்ள முடக்கற்றான் கீரை, மிளகு, சீரகம், உப்பு மற்றும் லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு தோசை பதத்துக்கு அரைக்க வேண்டும். அரைபட்டவுடன் கிரைண்டரை நிறுத்திவிடவும் இல்லையென்றால் மாவு மிகவும் மையாக அரைத்துவிடும் மற்றும் சுவையாக இருக்காது. அதனால் கிரைண்டரை நிறுத்தி மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். முடக்கற்றான் கீரை சேர்த்திருப்பதால் மாவு பச்சை நிறமாக இருக்கும்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்தவுடன் மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் தேய்க்கவும். தோசையை சுற்றி நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். வெந்தவுடன் தோசையை திருப்பி போட்டு மறுபடியும் நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். மாவு மிஞ்சினால் கவலை வேண்டாம் மீதமுள்ள மாவை ஃப்ரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்து மறுநாள் உபயோகிக்கவும். இந்த தோசையை எந்த சட்னியுடனும் சாப்பிடலாம் இல்லை என்றால் வெறுமனே கூட சாப்பிடலாம்.

குறிப்பு

இந்த தோசையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போகும். மருத்துவ குணம் கொண்ட கீரைக்கு நல்லெண்ணெய் சேர்ப்பதால் மருத்துவ குணம் கெடாமல் இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக