குறுந்தகவல்
இட்லி அரிசி – 1 கிலோ
நாட்டுத் தக்காளி – 5
பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் – 1/2 கிலோ
சோம்பு – 2 மேஜைக்கரண்டி
காய்ந்த குண்டு மிளகாய் – 5
தேங்காய் – 1/2 மூடி
கருவேப்பில்லை – சிறிது
பச்சை கொத்தமல்லி – சிறிது (அதிகம் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்)
பெருங்காயம் – 1 சிட்டிகை
நல்லெண்ணை – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டு மற்றும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். குறைந்த பட்ச்சம் 5 மணி நேரம் ஊறவேண்டும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்துள்ள அரிசி நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நல்ல பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த மாவு பாத்திரத்தில் அரிந்த வெங்காயம், துருவிய தேங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து குழம்பு கரண்டியை வைத்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். அடுப்பின் அருகே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொள்ளவும். பிறகு அடை மாவை எடுத்து இரண்டு முறை தோசை கல்லில் போட்டு கையால் வட்டமாக தட்ட வேண்டும். அடையை தட்டும் போது தண்ணீர் தொட்டு தட்ட வேண்டும் அப்பொழுது தான் தோசை கல்லின் அனல் கையை சுடாது மற்றும் எளிதாக தட்டவும் முடியும்.
தட்டியவுடன் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றி வேகவைக்கவும். இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும். இப்படி செய்வதால் அடை சீக்கிரமாக வேகும் இல்லை என்றால் வேகுவதற்கு சிறிது நேரமாகும் அவ்ளவுதான். சிறிது வெந்தவுடன் அதாவது 4 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக வைக்கவும். மறுபடியும் அடையை சுற்றி நல்லெண்ணையை ஊற்றவும். பிறகு இட்லி பானையின் மூடியை எடுத்து அடையை மூட வேண்டும்.
இந்த சுட சுட அடையுடன் தேங்காய் சட்னி மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இல்லை என்றால் வெறுமனே சாப்பிடலாம்.
குறிப்பு


பின்னூட்டமொன்றை இடுக